மாத்தறை–வெலிகமில் முன்னாள் தவிசாளரின் இல்லம் அருகே சடலம் மீட்பு !
#SriLanka
#Death
#Police
#Body
#ImportantNews
#Public
#L4
Lakhi
1 hour ago
சுட்டுக்கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் லசந்த விக்ரமசேகர வசித்து வந்த இல்லத்திற்கு அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து ஒருவரின் உடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், நேற்று மாத்தறை பதில் நீதவான் முன்னிலையில் 35 அடி ஆழமான கிணற்றிலிருந்து இந்த உடலம் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட உடலம், கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய வாலிபர் உடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் நண்பர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை மிடிகம காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்தவர் போதைப்பொருளுக்குப் பலத்த அடிமையானவர் எனத் தெரியவந்துள்ளது. மேலும், அவர் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ஒருவரா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து மிடிகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )