உறவினரின் கொடூரச் செயல்! - 8 சிறுவர்கள் பலி - என்ன நடந்தது?

#Death #children #America #world_news #GunShoot #ImportantNews #L4
Lakhi
2 months ago
உறவினரின் கொடூரச் செயல்! - 8 சிறுவர்கள் பலி - என்ன நடந்தது?

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். லூசியானாவின் தெற்கு ஸ்ரீவ்போர்ட் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்தத் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. மூன்று வீடுகளின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் 1 முதல் 14 வயதுக்குட்பட்ட 8 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அங்கிருந்து வாகனமொன்றைக் கடத்தித் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதன்போது காவல்துறையினர் அவரைத் துரத்திச் சென்று சுட்டதில், அவரும் உயிரிழந்தார். உயிரிழந்த சிறுவர்களில் சிலருக்கு குறித்த துப்பாக்கிதாரி உறவினர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் ஒரு "குடும்பப் பிரச்சினை" காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். துப்பாக்கி வன்முறைகளைக் கண்காணிக்கும் அமைப்பின் (Gun Violence Archive) தரவுகளின்படி, அமெரிக்காவில் இந்த ஆண்டில் மாத்திரம் இதுவரை 114 பாரிய துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4