ஈரானியக் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா - ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

#America #world_news #Attack #Iran #ImportantNews #Ship #L4
Lakhi
3 hours ago
ஈரானியக் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா - ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

தமது கடற்படை முற்றுகையை மீறிச் செல்ல முயன்ற ஈரானியக் கொடியுடன் கூடிய கப்பலொன்றை அமெரிக்கப் படையினர் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அல் ஜசீரா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஓமான் வளைகுடா பகுதியில் வைத்து வுழுருளுமுயு என்ற பெயருடைய ஈரானியக் கொடியுடன் கூடிய கப்பலை அமெரிக்காவின் ருளுளு ளுPசுருயுNஊநு என்ற ஏவுகணை அழிப்புப் போர்நிறுத்தி (Destroyer) இடைமறித்துள்ளது.

முன்னதாக, கப்பலை நிறுத்துமாறு அமெரிக்கப் படையினர் வழங்கிய எச்சரிக்கையை ஈரானிய மாலுமிகள் ஏற்க மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அமெரிக்கக் கடற்படையினர் அந்தக் கப்பலின் இயந்திர அறையை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தி, அதில் துளையிட்டு கப்பலைச் செயலிழக்கச் செய்துள்ளனர். தற்போது அமெரிக்க மரைன் படையினர் அந்தக் கப்பலைத் தமது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர்.

குறித்த 'வுழுருளுமுயு' கப்பலானது ஏற்கனவே சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி அமெரிக்க திறைசேரியினால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஒரு கப்பலாகும். கப்பலில் என்ன பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் தற்போது சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து ஈரான் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வமான கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவினால் முன்னெடுக்கப்படும் இந்த முற்றுகை நடவடிக்கையானது பிராந்தியத்தில் நேரடி இராணுவ மோதலுக்கான வாய்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!