இயேசு சிலையை உடைத்த இஸ்ரேலிய வீரர் - சர்வதேச அரங்கில் இஸ்ரேலுக்கு புதிய சிக்கல்!

#world_news #Attack #Israel #ImportantNews #Lebanon #L4
Lakhi
2 months ago
இயேசு சிலையை உடைத்த இஸ்ரேலிய வீரர் - சர்வதேச அரங்கில் இஸ்ரேலுக்கு புதிய சிக்கல்!

தெற்கு லெபனான் பகுதியில் இஸ்ரேலிய படைவீரர் ஒருவர்;, இயேசு கிறிஸ்துவின் சிலையினை உடைக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், அந்த சம்பவம் உண்மையானது என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவர் 'ஜக்ஹம்மர்' கருவியைப் பயன்படுத்தி இயேசு சிலையின் தலைப்பகுதியை உடைக்கும் காட்சி அந்தப் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது. லெபனானின் டெபல் கிராமத்தில் இந்தச் சிலை அமைந்துள்ளதாக அந்தப் பகுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், சிலைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அவர்களால் இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை. முன்னதாக, இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்ட நிலையில், இந்தப் புகைப்படம் உண்மையானது மற்றும் அண்மையில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இஸ்ரேலுக்குப் பெரும் ஆதரவை வழங்கும் பிரிவினரான 'எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவர்கள்' மத்தியில், இந்தச் சம்பவம் இஸ்ரேல் மீதான நற்பெயரைச் சிதைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே லெபனான் பகுதியில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4