இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து வலியுறுத்தல்

#government #Israel #Lanka4 #England #sanctions
Prasu
1 hour ago
இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து வலியுறுத்தல்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள நிலங்களை இணைக்கும் இஸ்ரேலின் நகர்வுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கிலாந்தின் எம்பிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

சுமார் 75 எம்பிகள் இணைந்து அவசர நாடாளுமன்றத் தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ளனர். 

ரிச்சர்ட் பர்கனால் முன்வைக்கப்பட்டுள்ள மேற்படி தீர்மானம், பாலஸ்தீன நிலத்தை “அரசு நிலம்” என்று பதிவு செய்வதன் மூலம் நிலத்தை அபகரிக்கும் இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டிக்கிறது.

இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பைத் தக்கவைக்க உதவும் எந்தவொரு ஆதரவையும் நிறுத்துவதன் மூலம், இங்கிலாந்து அரசாங்கம் தனது கொள்கையை சர்வதேச சட்டத்துடன் சீரமைக்க வேண்டும் என்று இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது.

இதற்கமைய ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் கட்டப்பட்ட குடியிருப்புகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்குத் தடை விதிப்பது, அத்துடன் ஆக்கிரமிப்பை நிலைநிறுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கம் போன்ற இலக்கு வைக்கப்பட்ட தடைகளை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எம்பிகள் வலியுறுத்தியுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!