மாகாண சபைத் தேர்தல்: இந்த ஆண்டு சாத்தியமா? - தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் விளக்கம்
#SriLanka
#Election
#Province
#council
#ImportantNews
#Explosion
#L4
Lakhi
1 hour ago
இலங்கையில் நீண்டகாலமாகத் தாமதமடைந்து வரும் மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டுக்குள் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எனினும், இதற்குக் குறுக்கே நிற்கும் சட்டச் சிக்கல்களை நாடாளுமன்ற செயற்குழு விரைவாகத் தீர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தில் 2017ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த முறையின் கீழ் தேர்தலை நடத்தத் தேவையான தொகுதி எல்லை நிர்ணயப் பணிகள் இதுவரையில் பூர்த்தி செய்யப்படவில்லை. முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கைக்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
எல்லை நிர்ணய அறிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து, பிரதமரின் தலைமையில் நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட மீளாய்வுக் குழு, தனது அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், அந்த அறிக்கை இன்றுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. கடந்த காலங்களில் இந்த பிரச்சினையைத் தீர்க்க எடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் பரிந்துரைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தற்போது இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக நாடாளுமன்ற விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னிலையாகி தேர்தல்கள் ஆணைக்குழு தனது தரப்பு விளக்கங்களை வழங்கியுள்ளது.
"விசேட செயற்குழு நியமிக்கப்பட்டு மூன்று மாத காலத்திற்குள் தனது விதப்புரைகளை வழங்க வேண்டும். அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி ஒரு தெளிவான முடிவை இந்த குழு அறிவித்தால், அதன் அடிப்படையில் எந்தத் தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பதை நாடாளுமன்றம் தீர்மானிக்கும்.
(வீடியோ இங்கே )