துருக்கியில் 9 பேரை கொன்று தற்கொலை செய்து கொண்ட 13 வயது சிறுவன்

#Death #School #Student #Murder #Lanka4 #GunShoot #Turkey
Prasu
2 months ago
துருக்கியில் 9 பேரை கொன்று தற்கொலை செய்து கொண்ட 13 வயது சிறுவன்
துருக்கியப் பள்ளி ஒன்றில் 13 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர். 

மேலும்,தாக்குதலுக்கு பின்பு குறித்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது, நாட்டில் அடுத்தடுத்த நாட்களில் நடந்த இரண்டாவது பள்ளித் துப்பாக்கிச் சூடு சம்பவம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்தத் தாக்குதல், நாட்டின் தெற்கில் உள்ள கஹ்ரமன்மாராஸ் மாகாணத்தில் நிகழ்ந்தது. அங்கு இதுபோன்ற பெரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பொதுவாக அரிதானவை. 

"ஒரு மாணவன் தனது பையில், அவனது தந்தைக்குச் சொந்தமானது என்று நாங்கள் நம்பும் துப்பாக்கிகளுடன் பள்ளிக்கு வந்தான். 

அவன் இரண்டு வகுப்பறைகளுக்குள் நுழைந்து கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், காயங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன" என்று கஹ்ரமன்மாராஸ் மாகாண ஆளுநர் முகர்ரெம் உன்லுயர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய எட்டாம் வகுப்பு மாணவன், ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரியின் மகன் என்றும் சந்தேக நபர் ஐந்து துப்பாக்கிகளையும் ஏழு தோட்டாக்கூடுகளையும் வைத்திருந்ததாகவும் உன்லுயர் குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4