போர் நிறுத்த பேச்சுவார்த்தை - இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு வலியுறுத்திய 17 நாடுகள்
வாஷிங்டனில் இரு நாடுகளுக்கும் இடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, பிரிட்டன் உட்பட 17 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வெளியிட்ட ஓர் அறிக்கையில், இஸ்ரேலையும் லெபனானையும் "இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு" வலியுறுத்தியுள்ளனர்.
"நேரடிப் பேச்சுவார்த்தைகள், லெபனான், இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்திற்கு நீடித்த பாதுகாப்பைக் கொண்டுவர வழிவகுக்கும்" என்று அமைச்சர்களின் கூட்டறிக்கையை பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டது.
"அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தத்தால் வழங்கப்படும் வாய்ப்பை, அனைத்துத் தரப்பினரும் உடனடியாகப் பயன்படுத்திக்கொண்டு பதற்றத்தைத் தணிக்க வேண்டும்" என்று அந்த அறிக்கை அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அறிக்கையில் பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளின் அமைச்சர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.
ஆனால் ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி அல்லது இத்தாலி ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் கையெழுத்திடவில்லை.
போரிடும் அண்டை நாடுகளான இஸ்ரேலும் லெபனானும், பல தசாப்தங்களுக்குப் பிறகு முதல் நேரடிப் பேச்சுவார்த்தையை நடத்தவிருந்தன; இந்தப் பேச்சுவார்த்தை அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோவின் மத்தியஸ்தத்தில் நடைபெறவிருந்தது.
(வீடியோ இங்கே )