உத்தரபிரதேசத்தில் மூடநம்பிக்கையால் உயிரிழந்த 14 வயது சிறுவன்

#India #Death #Police #LANKA4 #Youngster #Snake #superstition
Prasu
5 months ago
உத்தரபிரதேசத்தில் மூடநம்பிக்கையால் உயிரிழந்த 14 வயது சிறுவன்

உத்தரபிரதேசத்தில் பாம்பு தீண்டலுக்கு இலக்கான சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாது மந்திரவாதியிடம் பெற்றோர் அழைத்துச் சென்றதால் குறித்த சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை பாம்பு தீண்டியுள்ளது. அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாது, பெற்றோர் மந்திரவாதியை நாடியுள்ளனர்.

குறித்த மந்திரவாதி, சிறுவனின் உடலில் ஏறிய விஷம் இறங்க வேண்டுமானால், அவனைப் புனித கங்கை நதி நீரில் நீண்ட நேரம் மூழ்கடித்து வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கங்கையில் மூழ்கினால் பாம்பு விஷம் தானாகவே வெளியேறிவிடும் என்று மந்திரவாதியின் மூடநம்பிக்கை பேச்சை நம்பிய பெற்றோர் அவர்களது மகனை கங்கைக்கு அழைத்துச் சென்றனர்.

மூங்கிலால் செய்யப்பட்ட தற்காலிக மிதவை போன்ற அமைப்பில் சிறுவனை கட்டிவைத்த உறவினர்கள், சுமார் 12 மணி நேரம் அவனை கங்கை தண்ணீரிலேயே மூழ்கி இருக்குமாறு செய்துள்ளனர்.

முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காததாலும், நீண்ட நேரம் கடும் குளிரில் நீரில் இருந்ததாலும் பாம்பு கடித்த அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!