மீண்டும் 100 டொலரைத் தாண்டியது மசகு எண்ணெய் விலை!

#prices #world_news #Oil #ImportantNews #L4
Lakhi
2 months ago
மீண்டும் 100 டொலரைத் தாண்டியது மசகு எண்ணெய் விலை!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை உடன்பாட்டை ஏற்படுத்த தவறியதை தொடர்ந்து, சர்வதேசச் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகையிடப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததை தொடர்ந்தே இந்தத் திடீர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் விலை 9.04% உயர்ந்து 104.5 டொலராகவும், பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் விலை 8.55% உயர்ந்து 102.8 டொலராகவும் வர்த்தகமாகி வருகிறது. (இன்று காலை 6.30 நிலவரப்படி) ஈரானியத் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் கப்பல்களை இலக்கு வைத்து அமெரிக்காவின் மத்திய கட்டளை பணியகம் அமெரிக்க நேரப்படி இன்று முற்பகல் 10 மணி முதல் முற்றுகையைத் தொடங்கவுள்ளது.

இந்த முற்றுகை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், உலகச் சந்தையிலிருந்து தினசரி சுமார் 1.5 முதல் 1.7 மில்லியன் பீப்பாய் ஈரானிய எண்ணெய் விநியோகம் நிறுத்தப்படும். ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் இராணுவ நடமாட்டம் இருந்தால், அது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மீறலாகக் கருதப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் பிராந்திய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4