சுரங்க விபத்தில் 14 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளி

#Hospital #Mind #Mexico #Lanka4 #Rescue #Workers
Prasu
2 months ago
சுரங்க விபத்தில் 14 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளி

மெக்சிகோ நாட்டின் சினலோவா மாகாணத்தில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி சுரங்கத்தில் கடந்த மாதம் திடீரென வெள்ளம் புகுந்தது. இதில் சுரங்கத்தின் 300 அடி ஆழத்தில் 2 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். 

அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என கருதப்பட்ட நிலையில் மீட்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சுமார் 14 நாட்களுக்குப் பிறகு இருண்ட சுரங்கத்திற்குள் டார்ச் லைட் வெளிச்சம் தெரிவதைக்கண்டு வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

அங்கு 42 வயதான பிரான்சிஸ்கோ ஜபாடா என்ற தொழிலாளி ஒரு சிறு பாறை இடுக்கில் உணவின்றி உயிருக்குப் போராடி இருந்துள்ளார்.

மற்றொரு தொழிலாளி உயிரிழந்த நிலையில் ராணுவ வீரர்கள் உடனடியாக ஜபாடாவை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4