பிரான்சில் நடைபெற உள்ள பிரம்மாண்ட விருந்து - ட்ரம்பிற்கு அழைப்பு
#France
#America
#Lanka4
#President
#L4
#DonaldTrump
Prasu
1 hour ago
வெர்சாய் அரண்மனையில் இடம்பெறும் பிரமாண்டமான விருந்தில் கலந்துகொள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இதற்கான அழைப்பை விடுத்துள்ளார். இருப்பினும், இந்த நிகழ்வில் ட்ரம்ப் கலந்துகொள்வாரா என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்த ஆண்டு ஜி7 மாநாட்டை பிரான்ஸ் நடத்துகிறது. பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் உள்ள எவியான்-லெஸ்-பெய்ன்ஸ் என்ற ஏரிக்கரை ஓய்வு விடுதியில் ஜூன் 15-17ம் திகதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது. மேற்படி மாநாட்டிற்கு அடுத்த நாளே இந்த விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரானுடனான தனது போர் உள்ளிட்ட பிற பிரச்சினைகள் காரணமாக, பல ஜி7 உறுப்பு நாடுகளுடனான ட்ரம்பின் உறவு மேலும் மோசமடைந்துள்ள சூழ்நிலையில் ட்ரம்ப் இதில் கலந்துகொள்வரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
(வீடியோ இங்கே )