வீர மரணமடைந்த ஈரானிய உயர் தலைவரின் 40வது நாள் நினைவு தின நிகழ்வு

#Death #America #Attack #Day #Israel #Lanka4 #Iran #leader #memorial
Prasu
2 months ago
வீர மரணமடைந்த ஈரானிய உயர் தலைவரின் 40வது நாள் நினைவு தின நிகழ்வு

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28கடுமையாக தாக்கின. 

இதில், மினாப் நகரில் உள்ள பள்ளியை சேர்ந்த குழந்தைகள் 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

images/content-image/1775755069.jpg

மேலும், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், அயதுல்லா சையது அலி காமேனி மறைந்து 40 நாட்கள் ஆன நிலையில், நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள குடியரசு சதுக்கத்தில் அதற்கான நினைவு நிகழ்ச்சி நடந்தது.

images/content-image/1775755085.jpg

நிகழ்ச்சியில் ஜனாதிபதி மசூத் பெஜஸ்கியான் கலந்து கொண்டார். தேசிய அளவிலான இரங்கல் நிகழ்ச்சியின்போது, திரளான கூட்டத்தினர் தெருக்களில் திரண்டனர். 

ஈரான் முழுவதும் நூற்றுக்கணக்கான நகரங்களிலும், கவுன்டிகளிலும் அவர்கள் இதேபோன்ற நிகழ்ச்சிகளை நடைபெற்றுள்ளது.

images/content-image/1775755102.jpg

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4