ஈரான் போர் - ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்த கத்தார்
ஈரான் எங்கள் மீது தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் பதற்றம் அதிகரிப்பதைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு கத்தார் அரசு கடிதம் எழுதியுள்ளது.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான சபைத் தலைவர் ஜமால் ஃபாரெஸ் அல்ரோவாயி ஆகியோருக்கு இரண்டு வெவ்வேறான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 6 வரை நடந்த தாக்குதல்கள் தங்கள் நிலப்பரப்பைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் தங்கள் இறையாண்மை மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை ஈரான் மீறியதாகவும் கத்தார் குறிப்பிட்டுள்ளது.
இதில் ஒரு ஏவுகணை இடைமறிப்பின்போது குடியிருப்புப் பகுதியில் பாகங்கள் விழுந்து சிதறியதில் நான்கு பேர் காயமடைந்ததோடு, இதனால் சொத்துக்களும் சேதமடைந்ததாகவும் கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் தங்களது இறையாண்மையையும், குடிமக்களையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கத்தார் எடுக்கும் என எச்சரித்த அந்நாட்டு அரசு, இந்தச் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டிய கடமை ஈரானுக்கு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
(வீடியோ இங்கே )