உடன்படாவிட்டால் ஈரானில் முழு நாகரிகமே அழிந்துவிடும் - டிரம்ப் ஆவேசம்

#America #Attack #Lanka4 #Warning #Iran #Agreement
Prasu
2 months ago
உடன்படாவிட்டால் ஈரானில் முழு நாகரிகமே அழிந்துவிடும் - டிரம்ப் ஆவேசம்

ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும் என்ற தனது இறுதி எச்சரிக்கையை ஈரான் ஏற்கும் அறிகுறியைக் காட்டாத நிலையில், "இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வளைகுடா எண்ணெய் மீதான தனது முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுக்கு டிரம்ப் காலக்கெடு விதித்திருந்தார். 

இந்த காலக்கெடுவுக்குள் எவ்வித முடிவும் எடுக்க வில்லை என்றால் ஈரானில் உள்ள ஒவ்வொரு பாலத்தையும் மின் நிலையத்தையும் அமெரிக்கா அழித்துவிடும் என்றுதெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டிரம்பின் காலக்கெடு நெருங்க நெருங்க, ஈரான் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தன. 

இதில் ரயில் மற்றும் சாலைப் பாலங்கள், ஒரு விமான நிலையம் மற்றும் ஒரு பெட்ரோலிய வேதிப்பொருள் ஆலை ஆகியவை தாக்கப்பட்டன. 

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையம் அமைந்துள்ள கார்க் தீவில் உள்ள இலக்குகளை அமெரிக்கப் படைகள் தாக்கியுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4