விமானியின் கதி என்ன? ஈரானிய தாக்குதலில் நொறுங்கிய அமெரிக்க போர் விமானம் - தீவிரமடையும் பதற்றம்.

#Lanka4 #Jet #Pilot #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
விமானியின் கதி என்ன? ஈரானிய தாக்குதலில் நொறுங்கிய அமெரிக்க போர் விமானம் - தீவிரமடையும் பதற்றம்.

தெற்கு ஈரானில் அமெரிக்காவின் எஃப்-15 (F-15) ரக போர் வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அதில் பயணித்த ஒரு வீரர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை தெற்கு ஈரான் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த அமெரிக்க வானூர்திப்படைக்கு சொந்தமான எஃப்-15 ரக போர் வானூர்தியை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் உரிமை கோரியுள்ளன. 

இந்தத் தகவலை பிபிசி (BBC) உறுதிப்படுத்தியுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில், வானூர்தியில் இருந்த ஒரு நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். 

எனினும், வானூர்தியில் பயணித்த இரண்டாவது வீரரின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை எவ்விதத் தகவலும் வெளியாகவில்லை.

பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் (CBS News) கருத்துத் தெரிவித்த இரண்டு அமெரிக்க அதிகாரிகள், காணாமல் போன வீரரைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

வானூர்தியைச் சுட்டு வீழ்த்தியதை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ள ஈரானியப் பாதுகாப்புப் படைகள், காணாமல் போன மற்றைய வீரரைத் தங்களது படையினர் தீவிரமாகத் தேடி வருவதாக ஈரானிய அரசு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

ங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4