மசகு எண்ணெய் விலை அதிகரிப்பால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்!

#prices #world_news #Lanka4 #Oil #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
மசகு எண்ணெய் விலை அதிகரிப்பால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்கள் காரணமாக, உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று (ஏப்ரல் 1) மீண்டும் கணிசமான அதிகரிப்பை சந்தித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற சூழல் விநியோகச் சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தினால், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் ஏறுமுகத்தில் உள்ளன.

உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 103.1 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.8 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இதேவேளை, மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ள போதிலும், இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையில் இன்று சரிவு காணப்பட்டது.

சந்தை நிலவரப்படி, அதன் விலை 2.871 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றங்கள் தணியாத பட்சத்தில், மசகு எண்ணெய்யின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இந்த விலை உயர்வு உலக நாடுகளின் இறக்குமதி செலவினங்களை அதிகரிப்பதுடன், பணவீக்கத்தின் மீதும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4