துபாய் கடற்பரப்பில் 'அல்-சல்மி' எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்; பற்றி எரிந்த தீயால் பரபரப்பு.

#world_news #Attack #Lanka4 #Drone #fire #Dubai #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
துபாய் கடற்பரப்பில் 'அல்-சல்மி' எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்; பற்றி எரிந்த தீயால் பரபரப்பு.

டுபாய் கடற்கரைக்கு அப்பால் மசகு எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. குவைத் கொடியுடன் பயணித்த 'அல்-சல்மி' (Al-Salmi) என்ற கப்பலே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது.

பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஏவுகணைகள் அல்லது வெடிபொருட்கள் ஏந்திய ஆளில்லா வானூர்திகள் மூலம் வர்த்தகக் கப்பல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களின் சமீபத்திய நிகழ்வாக, இந்த தாக்குதல் அமைந்துள்ளது.

தற்போதைய சந்தை விலையின்படி 200 மில்லியன் டொலர்களுக்கும் அதிக மதிப்புள்ள, சுமார் 2 மில்லியன் கொள்கலன் மசகு எண்ணெயை ஏற்றிச் செல்லக்கூடிய இந்தக் கப்பல் மீதான தாக்குதல் குறித்து குவைத் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டதை அடுத்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

கப்பலின் உரிமையாளரான குவைத் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம், சேதங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஆளில்லா வானூர்தித் தாக்குதலுக்குப் பின்னர் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த முடிந்ததாகவும், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் துபாய் அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4