அமெரிக்காவுக்காக போரிட்டு இறந்த ஈழ தமிழ் வம்சாவளி வீரர் - குவியும் அஞ்சலிகள்

#Death #America #Lanka4 #Soldiers #Eelam #Middle East #L4
Prasu
2 months ago
அமெரிக்காவுக்காக போரிட்டு இறந்த ஈழ தமிழ் வம்சாவளி வீரர் - குவியும் அஞ்சலிகள்

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான போர், இன்று ஒரு மாதத்தைக் கடந்து உக்கிரமாகத் தொடர்ந்து வருகின்றது.

ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கியுள்ள இந்தப் போர்க்களத்தில், தமிழ் சமூகத்திற்குப் பெருமை சேர்த்த ஒரு வீரத் திருமகனும் தனது உயிரைத் தியாகம் செய்துள்ளார்.

அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றி வந்த தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த விசாகன் சத்தியமூர்த்தி அவர்கள், கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி போர்க்களத்தில் வீரமரணமடைந்தார்.

1993ம் ஆண்டு மே மாதம் 10ம் திகதி அமெரிக்க இராணுவத்தில் இணைந்த விசாகன் சத்தியமூர்த்தி, சுமார் 33 ஆண்டுகாலமாகத் தனது அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை வழங்கி வந்தார்.

மத்திய கிழக்கு போரில் கொல்லப்பட்ட முதல் தமிழ் அமெரிக்க இராணுவ வீரர் இவராவார். இவரது மறைவு உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும், அமெரிக்கத் தமிழ் சமூகத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீரமரணமடைந்த விசாகன் சத்தியமூர்த்தி அவர்களின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி மதியம் 1.00 மணியளவில், கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் தேசிய மயானத்தில் (Los Angeles National Cemetery) நடைபெறவுள்ளன.

இதன்போது, அமெரிக்க இராணுவ வீரர்களால் அவருக்கு உயரிய இராணுவ மரியாதையும், வீரவணக்கமும் செலுத்தப்படவுள்ளது. 

ஒரு தமிழனாக உலக வல்லரசின் இராணுவத்தில் உயரிய பொறுப்பு வகித்து, போர்க்களத்தில் உயிர்நீத்த இவருக்குப் பலரும் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4