ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்த இந்தியாவின் இரண்டு எரிவாயு கப்பல்கள்

#Israel #War #Oil #Iran #Ship #lanka4.com #L4
Prasu
2 months ago
ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்த இந்தியாவின் இரண்டு எரிவாயு கப்பல்கள்

BW Elm மற்றும் BW Tyr என்ற இரண்டு திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) கப்பல்கள் இந்தியாவை நோக்கி ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்துள்ளது ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர், இந்த ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்தை ஏறக்குறைய நிறுத்திவிட்டது. 

ஆனால், ஈரானிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்தால், "போர் அல்லாத கப்பல்கள்" இந்த நீர்வழியைக் கடந்து செல்லலாம் என்று ஈரான் இந்த வாரம் தெரிவித்திருந்தது.

இந்தியக் கொடியுடன் கூடிய அந்த இரண்டு கப்பல்களும் வளைகுடாப் பகுதியைக் கடந்து, ஹார்முஸ் ஜலசந்தியின் கிழக்குப் பகுதியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜலசந்தியில் சிக்கியுள்ள தனது LPG சரக்குகளை இந்தியா படிப்படியாக வெளியேற்றி வருகிறது. இதுவரை ஷிவாலிக், நந்தா தேவி, பைன் கேஸ் மற்றும் ஜக் வசந்த் ஆகிய நான்கு LPG கப்பல்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.

இன்றைய நிலவரப்படி, ஐந்து LPG கப்பல்கள் உட்பட 20 இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் வளைகுடாவில் சிக்கியுள்ளன என்று மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா ​​தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4