ஈரானில் நடந்த அதிரடி நடவடிக்கையில் 39 நபர்கள் பேர் கைது
#Arrest
#Weapons
#War
#Iran
#L4
Prasu
2 months ago
ஈரானிய உளவுத்துறை அமைச்சகம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 39 நபர்கள் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் படையினர் நடத்திய இந்த சோதனையில் ஏழு ஸ்டார்லிங்க் இணைய சாதனங்கள், கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் நிலவும் தொடர்ச்சியான இணைய முடக்கத்திற்கு மத்தியில், சட்டவிரோத தகவல் தொடர்புகளைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
பிடிபட்டவர்களிடமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்டாக்களும் மற்ற ராணுவத் தளவாடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே