பிலிப்பைன்ஸில் எரிபொருள் அவசரநிலை பிரகடனம்

#Fuel #War #Phillipines #StateOfEmergency #Middle East #L4
Prasu
2 months ago
பிலிப்பைன்ஸில் எரிபொருள் அவசரநிலை பிரகடனம்

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி போங்போங் மார்கோஸ், நாட்டில் எரிசக்தி அவசரநிலையை அறிவித்துள்ளார்.

தற்போது பிலிப்பைன்ஸில் 45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மட்டுமே இருப்பில் உள்ளது. இதனை அதிகரிக்க, பல்வேறு நாடுகளிலிருந்து 10 லட்சம் பேரல் எண்ணெயை வாங்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த அவசரநிலை ஒரு ஆண்டு காலத்திற்கு அமலில் இருக்கும். இதன் மூலம், எரிபொருள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விரைவாகக் கொள்முதல் செய்ய அரசுக்கு கூடுதல் அதிகாரம் கிடைத்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு தலா 5,000 பெசோ மானியம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே எரிபொருள் மீதான கலால் வரி மற்றும் வாட் வரியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அங்குள்ள அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4