இராணுவப் பிரிவுகள் மீதான தாக்குதல் - அமெரிக்க தூதருக்கு அழைப்பு விடுத்த ஈராக்
மேற்கு ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் உள்ள ஒரு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஏழு போராளிகள் கொல்லப்பட்டதாகவும், 13 பேர் காயமடைந்ததாகவும் ஈராக்கின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹபானியாவில் உள்ள அந்தத் தளத்தில் இருக்கும் இராணுவ சுகாதார நிலையத்தை இந்தத் தாக்குதல்கள் குறிவைத்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலை "அனைத்து சர்வதேச சட்டங்களையும் நெறிமுறைகளையும்" மீறிய "ஒரு கொடூரமான குற்றம்" என்று அமைச்சகம் வர்ணித்துள்ளது.
மேலும்,"தேசிய இறையாண்மையின் கடுமையான மீறலாகவும், ஈராக்கிய பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான ஏற்றுக்கொள்ள முடியாத அத்துமீறலாகவும் அமையும் ஒரு அப்பட்டமான ஆக்கிரமிப்பு" என்று மக்கள் திரட்டல் படைகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், நாட்டின் இராணுவப் பிரிவுகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரை வரவழைக்குமாறு வெளியுறவு அமைச்சகத்திற்கு ஈராக் பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )