பிரான்சில் துணை மேயராக பொறுப்பேற்ற யாழ் பெண் அதிதியா ஆனந்தராசா

#SriLanka #Jaffna #France #Women #Mayor #L4
Prasu
1 hour ago
பிரான்சில் துணை மேயராக பொறுப்பேற்ற யாழ் பெண் அதிதியா ஆனந்தராசா

பிரான்சின் பொன்டோல்-கொம்போல் நகராட்சியில் ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அதிதியா ஆனந்தராஜா துணைமேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்மணி அதிதியா ஆனந்தராஜா அவர்கள், பொன்டோல்-கொம்போல் நகராட்சியின் துணைமேயராக உத்தியோகபூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பிரான்சில் உள்ளாட்சித் தேர்தல்கள் இடம்பெற்றன. இதில் பொன்டோல்-கொம்போல் நகராட்சியில் தற்போதைய மேயர் கில்லெஸ் போர்ட் தலைமையிலான “Ensemble pour Pontault-Combault” என்ற கூட்டணி அமோக வெற்றியைப் பதிவு செய்தது.

அதன் வெற்றியைத் தொடர்ந்து, நடைபெற்ற நகராட்சி சபையின் முதல் அமர்வில், அதிதியா ஆனந்தராஜா அவர்கள் துணைமேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்குரிய கௌரவப் பட்டையமும் அணிவிக்கப்பட்டது.

அதிதியா ஆனந்தராஜா அவர்கள் நீண்டகாலமாக பிரான்சில் சமூக மற்றும் அரசியல் ரீதியான பணிகளில் ஈடுபாடு காட்டி வருபவர்.

குறிப்பாக, புலம்பெயர்ந்த ஈழதமிழர்களின் உரிமைகள் மற்றும் அப்பகுதி மக்களின் தேவைகளுக்காகக் குரல் கொடுத்து வந்த இவருக்கு, தற்போது கிடைத்துள்ள இந்த உயரிய பதவி உலகளாவிய ரீதியில் வாழும் ஈழதமிழர்களுக்குப் பெருமிதத்தைத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே பிரான்சின் பல்வேறு நகரங்களில் ஈழத்தமிழர்கள் துணைமேயர்களாகவும், நகரசபை உறுப்பினர்களாகவும் பதவி வகித்து வரும் நிலையில், அதிதியா ஆனந்தராஜாவின் இந்த வெற்றி பிரான்ஸ் அரசியலில் தமிழர்களின் ஆளுமையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விடயமானது பிரான்ஸ் வாழ் ஈழதமிழர்கள் மட்டும் அல்லது அனைத்து ஈழத்தமிழர்களுக்கு மிகவும் பெருமையான விடயமாக பார்க்கப்படுகிறது.

ஈழத்தமிழர்கள் பல துன்பங்களுக்கு முகம் கொடுத்து கடல்கடந்து சென்று அங்கும் பல சோதனைகளை சந்தித்து அதிலிருந்து இருந்து ஏழுந்து சாதனைகள் படைக்கும் பொழுது நாம் விழமாட்டோம் என மீண்டும் மீண்டும் வளர்ந்து வரும் தலை முறையினருக்கு ஒரு வழிகாட்டிகளாக இருந்து வருகிறார்கள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!