எரிசக்தி நெருக்கடி தீவிரம்: கட்டாய கட்டுப்பாடுகள் வருமா?

#world_news #Fuel #ImportantNews #L4
Lakhi
3 months ago
எரிசக்தி நெருக்கடி தீவிரம்: கட்டாய கட்டுப்பாடுகள் வருமா?

தற்போது நிலவும் எரிசக்தி நெருக்கடி காரணமாக, மக்கள் 'வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும்' அல்லது 'எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் (Rationing)' என சர்வதேச எரிசக்தி முகமை (IEA) முன்வைத்துள்ள ஆலோசனைகள் வெறும் ஆரம்பம் மட்டுமே என சுயாதீன எரிசக்தி ஆய்வாளர் கெட்டன் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடி மேலும் தீவிரமடைந்தால், தற்போதுள்ள இந்த ஆலோசனைகள் கட்டாய விதிகளாக (Enforced rules) மாற்றப்படும். இது மிகவும் தீவிரமான நிலையை உருவாக்கும் என அவர் எச்சரித்துள்ளார். அரசாங்கங்கள் தற்போது புதைபடிவ எரிபொருட்கள் (Fossil fuels) மீதான தங்கியிருப்பைக் குறைப்பதில் குறுகிய காலத் தீர்வுகளையே தேடுகின்றன. இதனை விடுத்து, நீண்ட கால அடிப்படையில் சிக்கலான உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைச் சாராத எரிபொருள் வகைகளை நோக்கி அரசாங்கங்கள் நகர வேண்டும்.

அத்துடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார வாகனங்கள் (EV) குறித்து அதிகம் பேசப்பட்டாலும், குறுகிய மற்றும் நீண்ட காலத் தீர்வுகளுக்காக இன்னும் பல தொழில்நுட்பங்களை நாம் பரிசீலிக்க வேண்டும். இந்தநிலையில் வளைகுடா யுத்தத்தில் எரிசக்தி மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும் என்று ஜோஷி வலியுறுத்தினார்.

இவை வெறும் உட்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் மட்டுமல்ல, சாதாரண பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு விடுக்கப்படும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4