குவைட் சர்வதேச வானூர்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்!
#Airport
#world_news
#Attack
#International
#ImportantNews
#Kuwait
#L4
Lakhi
3 hours ago
இதனால் வானூர்தி நிலையத்தின் எரிபொருள் தாங்கி தீப்பற்றியதாக தெரிவிக்கப்பட்;டுள்ளது.
ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தப்பட்டதில் இந்த பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக குவைத் சிவில் வானூர்தி போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
ஈரான் போர் தொடங்கிய பிறகு குவைத் சர்வதேச வானூர்தி நிலையம் இலக்கு வைக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
முன்னதாக, கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலில் வானூர்தி நிலையத்தின் ரேடார் அமைப்பு சேதமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் நேற்று இரவு மட்டும் குவைத்தில் சுமார் 12 முதல் 13 முறை அபாயச் சங்கு முழங்கியது. போர் தொடங்கிய பிறகு ஒரே இரவில் இத்தனை முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
அதேநேரம் நேற்றிரவு குவைத் வான்பரப்பில் ஊடுருவிய 13 ஆளில்லா வானூர்திகள்; மற்றும் 6 ஏவுகணைகளை குவைத் இராணுவம் இடைமறித்து அழித்துள்ளது.
இந்தநிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக குவைத் சர்வதேச வானூர்தி நிலையத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் போர் தொடங்கிய காலத்திலிருந்தே இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, குவைத்திற்கு வர வேண்டிய அனைத்து வானூர்திகளும் சவுதி அரேபியாவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. குறிப்பாக, சவுதியின் தமாம் வானூர்தி நிலையம் இதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
(வீடியோ இங்கே )