அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நீதிபதிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

#Arrest #America #money #Judge #Indian #Fraud #L4
Prasu
3 months ago
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நீதிபதிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

டெக்சாஸில் பணமோசடி தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க மாவட்ட நீதிபதி ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

ஃபோர்டு பெண்ட் பகுதியில் பணியாற்றிய முதல் இந்திய வம்சாவளி நீதிபதி இவரே ஆவார். கே.பி. ஜார்ஜ் மூன்றாம் நிலைக் குற்ற வழக்குகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம். 

கே.பி. ஜார்ஜ், தேர்தல் பிரச்சார நிதியிலிருந்து $46,000க்கும் அதிகமான தொகையைத் தனது தனிப்பட்ட கணக்கிற்கு மாற்றியதற்காகக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சார நிதி அறிக்கைகளில் ஜார்ஜ் "தொடர்ந்து பொய் கூறி வந்ததாகவும்" அந்த நிதியைத் தனது "தனிப்பட்ட நலனுக்காக" பயன்படுத்தியதாகவும் உதவி மாவட்ட வழக்கறிஞர் கேத்தரின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4