ட்ரம்ப் - ஈரான் ரகசிய டீல்? அம்பலமானது 580 மில்லியன் டொலர் மர்ம வர்த்தகம்!

#world_news #Iran #Deal #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4 #DonaldTrump
Abi
3 months ago
ட்ரம்ப் - ஈரான் ரகசிய டீல்? அம்பலமானது 580 மில்லியன் டொலர் மர்ம வர்த்தகம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் அரசுடன் "மிகவும் பயனுள்ள மற்றும் ஆக்கபூர்வமான" பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக அறிவிப்பதற்குச் சரியாக 15 நிமிடங்களுக்கு முன்னதாக, மசகு எண்ணெய் சந்தையில் அரை பில்லியன் டொலருக்கும் அதிகமான வர்த்தகம் நடந்திருப்பதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விசித்திரமான நேரக் கணக்கீடு, நிதி உலகில் "உள்வழி வர்த்தக" சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளது.

ப்ளூம்பெர்க் தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நியூயார் நேரப்படி காலை 6:49 முதல் 6:50 மணிக்குள் (அதாவது ட்ரம்ப் தனது பதிவை வெளியிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்), சுமார் 6,200 பிரெண்ட் மற்றும் மேற்கு டெக்சாஸ் இடைநிலை எண்ணெய் ஒப்பந்தங்கள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன.

இதன் மொத்த மதிப்பு சுமார் 580 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை தனது TruthSocial தளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட அந்தப் பதிவு, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையைத் திடீரென வீழ்ச்சியடையச் செய்தது.

 ஈரான் உடனான இணக்கமான சூழல் நிலவினால் எண்ணெய் விநியோகம் சீராகும் என்ற எதிர்பார்ப்பே இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணம்.

விலை வீழ்ச்சியடைவதற்குச் சரியாக 15 நிமிடங்களுக்கு முன்னர் வர்த்தகம் செய்தவர்கள், இந்தத் திடீர் மாற்றத்தின் மூலம் கோடிக்கணக்கான லாபத்தை ஈட்டியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சந்தையில் எந்தவிதமான பெரிய நிகழ்வுகளும் எதிர்பார்க்கப்படாத ஒரு நேரத்தில், இவ்வளவு பெரிய அளவிலான வர்த்தகம் நடந்தது "இயல்பற்றது" என முதலீட்டு மேலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"கடந்த 25 ஆண்டுகளாக சந்தையை கவனித்து வரும் எனது அனுபவத்தில், இது மிகவும் அசாதாரணமானது. ஒரு பெரிய நிகழ்வு அல்லது அபாயம் இல்லாத ஒரு நாளில் இவ்வளவு பெரிய வர்த்தகம் நடப்பது ஆச்சரியமளிக்கிறது. 

யாரோ ஒருவர் இன்று மிகப்பெரிய அளவில் பணக்காரர் ஆகியிருக்கிறார்" என சந்தை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக, வெள்ளை மாளிகையின் முக்கிய முடிவுகள் வெளியாவதற்கு மிக நெருக்கமான நேரங்களில், Polymarket போன்ற தளங்களில் பெரிய அளவிலான பந்தயங்கள் கட்டப்படுவது அதிகரித்துள்ளதாக அல்ஜெசீரா தெரிவித்துள்ளது.

இது அரசாங்க ரகசியங்கள் முன்கூட்டியே கசிந்து வர்த்தகர்களுக்கு லாபமாக மாறுகிறதா என்ற கேள்வியையும், "இன்சைடர் டிரேடிங்" குறித்த விசாரணைகளுக்கான தேவையையும் அதிகரித்துள்ளது.

ஈரான் தரப்பு இந்தப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக மறுத்துள்ள போதிலும், சந்தையில் ஏற்பட்ட அந்த 15 நிமிட மர்மம் இன்னும் விலகவில்லை.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4