வலுப்பெறும் போர் பதற்றம் - மேலும் தீவிரமடையும் என இஸ்ரேல் தெரிவிப்பு!!

#War #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 months ago
வலுப்பெறும் போர் பதற்றம் - மேலும் தீவிரமடையும் என இஸ்ரேல் தெரிவிப்பு!!

ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகளின் தாக்குதல்கள் இந்த வாரம் குறிப்பிடத்தக்க வகையில் தீவிரமடையும்" என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) தெரிவித்துள்ளார்.

இராணுவ அதிகாரிகளுடன் இன்று நடைபெற்ற பாதுகாப்பு மதிப்பாய்வுக் கூட்டத்தின் போதே அவர் இந்தத் திடுக்கிடும் தகவலை வெளியிட்டதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரானிய பயங்கரவாத ஆட்சிக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அவர்களின் தளபதிகளைக் கொன்று குவிப்பதும், ஈரானின் மூலோபாயத் திறன்களைச் சிதைப்பதும் எமது முக்கிய இலக்காகும்" என 'டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' (Times of Israel) பத்திரிகை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் நாடு மற்றும் வளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நலன்களுக்கு எதிரான அனைத்து அச்சுறுத்தல்களும் நீக்கப்படும் வரை இந்தத் தாக்குதல்கள் ஓயாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“யுத்தத்தின் அனைத்து இலக்குகளும் எட்டப்படும் வரை நாங்கள் எமது நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை" என பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த வாரத்தில் தாக்குதல்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அறிவிப்பு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4