ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க கப்பல்கள் - பதற்றத்தின் விளிம்பில் பிராந்தியம்!

#world_news #Iran #ADDA #SHELVA #SHELVAFLY #ADDAPOOJA #L4
Abi
3 months ago
ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க கப்பல்கள் - பதற்றத்தின் விளிம்பில் பிராந்தியம்!

ஈரானுக்கு எதிராகப் போரிடும் தனது படைகளைப் பலப்படுத்துவதற்காக, அமெரிக்க இராணுவம் பல போர்க்கப்பல்களுடன் 4,000 கடற்படை

வீரர்களை அனுப்பத் தயாராகி வருவதாக 'நியூஸ்மேக்ஸ்' (Newsmax) செய்தியை மேற்கோள் காட்டி அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத நான்கு அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மேற்கு கடற்கரையிலிருந்து புறப்படும் இந்தப் படையில் 'பொக்சர் ஆம்பிபியஸ் ரெடி குரூப்' (Boxer Amphibious Ready Group) உள்ளடங்குவதாகவும், இதில் F-35 ரக போர் வானூர்திகள், ஏவுகணைகள் மற்றும் தரையிறங்கித் தாக்குதல் நடத்தக்கூடிய கவச வாகனங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2,500 கடற்படை வீரர்களையும் 'யு.எஸ்.எஸ் திரிப்போலி' (USS Tripoli) எனும் தாக்குதல் கப்பலையும் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அமெரிக்கா அனுப்பியுள்ள நிலையில், தற்போதைய இந்த நகர்வு போர்ச் சூழலில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4