கனடாவில் 26 வயது இந்திய மாணவர் படுகொலை
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான குர்கிரத் சிங் மேல் படிப்புக்காக கனடா சென்றிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை ஒரு கும்பல் அவரைத் தாக்கி படுகொலை செய்துள்ளது.
இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள உஜ்ஜைன் என்னுமிடத்தைச் சேர்ந்த சிங், பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள கல்லூரியில் முதுகலைப் பட்டயப்படிப்பு படித்துக்கொண்டிருந்தார்.
படித்துக்கொண்டே வால்மார்ட் பல்பொருள் அங்காடி ஒன்றில் பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டிருந்த சிங், இம்மாதம், அதாவது, மார்ச் மாதம் 14ம் திகதி, வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது, 10 முதல் 12 பேர் வரை கொண்ட ஒரு கும்பல் அவரை தாக்கியுள்ளது.
மேலும், அவர் மீது வாகனம் ஒன்றையும் ஏற்றிச் சென்றுள்ளது அந்தக் கும்பல். படுகாயமடைந்த சிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )