மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு - இலங்கையில் வரலாற்றுச் சாதனை!

#SriLanka #water #Large #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
4 months ago
மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு - இலங்கையில் வரலாற்றுச் சாதனை!

இலங்கை வரலாற்றில் இதுவரை கண்டறியப்பட்ட நிலத்தடி நீர் ஊற்றுகளில் மிகப்பெரிய நீர் ஊற்று ஒன்று மாத்தறை - பிட்டபெத்தர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தேசிய நீர்வழங்கல் சபையினால் முன்னெடுக்கப்பட்ட குழாய் கிணறு தோண்டும் பணியின் போதே இந்த பாரிய நீர் ஊற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நீர் ஊற்றிலிருந்து ஒரு நிமிடத்திற்கு 10,000 லீற்றர் (10 கன மீட்டர்) நீர் தொடர்ச்சியாக வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் மன்னார் - மடு பகுதியில் கண்டறியப்பட்ட நீர் ஊற்றே மிகப்பெரியதாக கருதப்பட்டது.

அங்கிருந்து ஒரு நிமிடத்திற்கு 7,000 லீற்றர் நீரே பெறப்பட்டிருந்தது. பாறைகளை ஆய்வு செய்து, நவீன தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் நிலத்தடி நீர் இருக்கும் இடத்தை இனங்கண்டு இந்த அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிட்டபெத்தர, மொரவக்க மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வழங்கல் சபை அறிவித்துள்ளது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4