ஈரான் ஏவுகணைகளை இடைமறிக்கும் இஸ்ரேல்!

#world_news #Attack #Israel #War #Iran #ImportantNews #L4 #IranVsIsrael
Lakhi
3 months ago
ஈரான் ஏவுகணைகளை இடைமறிக்கும் இஸ்ரேல்!

ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறிக்கும் பணிகளில் தமது வான் பாதுகாப்பு அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் காரணமாக,பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் இஸ்ரேல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஈரான் இன்று காலையில் தனது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதை அடுத்து, இஸ்ரேல் முழுவதும் போர் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இஸ்ரேலிய உள்நாட்டு பாதுகாப்புப் படையினர், அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் உள்ள மக்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு நேரடி எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பியுள்ளனர்.

இந்தநிலையில், ஈரானில் இருந்து வரும் ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து அழிப்பதற்கான பணிகளை வான் பாதுகாப்பு அமைப்புகள் முன்னெடுத்து வருவதாக இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4