அமெரிக்க வானூர்தி விபத்து குறித்து மாறுபட்ட தகவல்கள் – ஆயுதக்குழு தாக்குதல் என உரிமை கோரல்

#Flight #Police #America #world_news #Attack #Oil #Iran #ImportantNews #L4
Lakhi
3 months ago
அமெரிக்க வானூர்தி விபத்து குறித்து மாறுபட்ட தகவல்கள் – ஆயுதக்குழு தாக்குதல் என உரிமை கோரல்

அமெரிக்காவின் KC-135 எரிபொருள் நிரப்பும் வானூர்தி வீழ்ந்து நொருங்கிய சம்பவத்திற்கு, ஈரானின் ஆதரவு பெற்ற ஈராக்கிய ஆயுதக் குழுவான 'ஈராக்கின் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம்' உரிமை கோரியுள்ளது.

மேற்கு ஈராக்கில் வீழ்ந்து நொருங்கிய அமெரிக்க வானூர்தி தொடர்பாக ஈராக்கிய ஆயுதக் குழு விடுத்துள்ள தமது அதிகாரபூர்வ அறிக்கையில் இந்த உரிமை கோரலை விடுத்துள்ளது. தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் இலக்கு வைக்கப்பட்டே அந்த வானூர்தி; வீழ்த்தப்பட்டதாக ஆயுதக்குழு தெரிவித்துள்ளது.

அமெரிக்க வானூர்தியை வெற்றிகரமாகத் தாக்கியதாகவும், அதனாலேயே அது விபத்துக்குள்ளானதாகவும் ஆயுதக்குழு உரிமை கோரியுள்ளது. எனினும் இந்த சம்பவம் எதிரிகளின் தாக்குதலாலோ அல்லது நட்புப் படைத் தாக்குதலாலோ ஏற்படவில்லை என அமெரிக்க மத்திய கட்டளை தலைமையகம் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4