பெரிய அளவிலான எரிபொருள் கடத்தல்: டீசலுடன் நால்வர் கைது.

#SriLanka #Arrest #Large #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
5 hours ago
பெரிய அளவிலான எரிபொருள் கடத்தல்: டீசலுடன் நால்வர் கைது.

கீழ் பியகம பகுதியில் சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 19,060 லீற்றர் டீசலுடன் இரண்டு வாகனங்கள் மற்றும் நான்கு சந்தேகநபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

களனி பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (11) மாலை இந்த விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் ஹெய்யந்துடுவ, திஹகொட மற்றும் நெலும்தெனிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வீதியில் பயணிக்கும் பாரவூர்தி, டிப்பர் ரக வாகனங்கள் மற்றும் பிரைமூவர் (Primemover) ரக வாகனங்களின் ஓட்டுனர்களுக்கு பணம் வழங்கி, அந்த வாகனங்களின் எரிபொருள் டாங்கிகளிலிருந்து சட்டவிரோதமாக டீசலை இவர்கள் பெற்று வந்துள்ளனர்.

பின்னர் அவற்றை பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட டாங்கிகளில் சேமித்து வைத்து விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த கைது நடவடிக்கையின் போது, வாகனங்களில் இருந்து எரிபொருளை உறிஞ்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட இயந்தியரங்கள் பொருத்தப்பட்ட இரண்டு குழாய்கள், 16 பீப்பாய்கள் மற்றும் 381,000 ரூபா பணம் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!