ஈரான் மீதான போர் விரைவில் முடிவு - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி 28 கடுமையாக தாக்கின. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர்.
இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது. ஈரானும் பதிலடி கொடுத்து வருவதுடன், மோதல் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “ஈரானில் இனி குறிவைப்பதற்கு எதுவும் இல்லை. ஈரான் மீதான தாக்குதலில் பெரும்பாலான இலக்குகளை அடைந்துவிட்டோம்.
இன்னும் ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு, விரைவில் ஈரானில் போர் முடிவுக்கு வரும்” என்று தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )