133 பயணிகளுடன் தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்து

#India #Flight #Accident #Thailand #Rescue #L4
Prasu
1 month ago
133 பயணிகளுடன் தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்து

தெலுங்கானாவின் ஐதராபாத் விமான நிலையத்தில் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தாய்லாந்தின் புக்கெட் நகர விமான நிலையத்துக்கு சென்றடைந்தது. 

அங்கு ஓடுபாதையில் தரையிறங்கும் போது பலமாக மோதியதால் விமானத்தின் முன் பகுதி சக்கரம் (Nose Landing Gear) சேதமடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதனால் விமானம் ஓடுபாதையின் நடுவிலேயே நின்றது. விமானத்தில் இருந்த 133 பயணிகளும் எவ்வித காயமுமின்றி பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். 

புக்கெட் விமான நிலையத்தின் ஓடுபாதை பல மணி நேரம் மூடப்பட்டது. ஓடுபாதை முழுமையாக சோதிக்கப்பட்டு, பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்ட பிறகே விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. 

விமானத்தின் முன் சக்கரம் சேதமடைந்ததற்கான சரியான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!