"நாடு செல்வந்தமானது எனக்கூறிவிட்டு மக்கள் ஒருவேளை உணவிற்கே வழியின்றி தவிக்கின்றனர்"!!

#SriLanka #people #Food #Country #Rich #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
4 months ago
"நாடு செல்வந்தமானது எனக்கூறிவிட்டு மக்கள் ஒருவேளை உணவிற்கே வழியின்றி தவிக்கின்றனர்"!!

அரசாங்கத்திடம் 7 பில்லியன் டொலர் கையிருப்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைத்து நாட்டு மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர கோரிக்கை விடுத்துள்ளார். 

பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்றைய தினம் (2026.03.11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே மக்களுக்குப் பொய்களைக் கூறி ஏமாற்றி வருவதாகக் குற்றம் சுமத்திய அவர், ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் எரிபொருள் கையிருப்பு பல நாட்களுக்கு இருப்பதாகக் கூறிய போதிலும், அடுத்த 6 நாட்களிலேயே விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். 

சந்தையில் விலை உயர்ந்ததாகக் கூறி மக்களைத் தொடர்ந்து முட்டாளாக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோது, கொவிட் காலத்தில் எரிபொருள் மீதான வரிகளைக் குறைக்கக் கோரினார். 

ஆனால் இன்று 92 வகை பெட்ரோலுக்கு 117 ரூபாயும், டீசலுக்கு 100 ரூபாயும் வரி விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் இந்த வரியையாவது நீக்கி மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் ஏன் முன்வரவில்லை என அவர் கேள்வி எழுப்பினார். 

முன்னதாக சர்க்கரை விலையை உயர்த்தியபோது அதன் பயன்பாட்டைக் குறைக்கவே அவ்வாறு செய்ததாகக் கூறிய அரசாங்கம், இப்போது எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவே விலை உயர்த்தப்பட்டதாகக் கூறுவது வேடிக்கையானது என அவர் சாடினார்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை 90% அதிகரித்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் வெளியிட்ட கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனச் சுட்டிக்காட்டிய ஜானக வக்கும்புர, பாகிஸ்தானில் 26% மற்றும் வியட்நாமில் 19% மட்டுமே விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அமைச்சர் தவறான தரவுகளை வழங்குவதாகத் தெரிவித்தார்.

சிங்கள - தமிழ் புத்தாண்டு நெருங்கும் வேளையில், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

ராஜபக்சவின் காலத்தில் நாடு முடக்கப்பட்டிருந்த போதும், அந்நிய செலாவணி இல்லாத நிலையிலும் மக்களுக்குத் தேவையான மருந்தும் உணவும் தடையின்றி வழங்கப்பட்டதுடன் நிவாரணத் தொகைகளும் வழங்கப்பட்டன. 

இன்று 7 பில்லியன் டொலர் கையிருப்பில் இருப்பதாகக் கூறும் அரசாங்கம், மக்களுக்கு ஒருவேளை உணவிற்கே வழியில்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே, பொய்களைக் கூறுவதை நிறுத்திவிட்டு எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைத்து மக்களுக்கு உண்மையான நிவாரணத்தை வழங்குமாறு அவர் வலியுறுத்தினார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4