டைட்டானிக் பாணியில் ட்ரம்ப் - எப்ஸ்டீன் சிலை!!

#world_news #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4 #DonaldTrump
Abi
3 months ago
டைட்டானிக் பாணியில் ட்ரம்ப் - எப்ஸ்டீன் சிலை!!

அமெரிக்காவின், வொஷிங்டனில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கேலி செய்யும் சிலைகள் மற்றும் கலைப்படைப்புகளை நிறுவி வரும் பெயரிடப்படாத கலைஞர்கள் குழு, நேற்று(10) காலை 'நேஷனல் மால்' (National Mall) பகுதியில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட சிலையை நிறுவியுள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும் ஜெப்ரி எப்ஸ்டீனும் "டைட்டானிக்" திரைப்படத்தின் புகழ்பெற்ற ஒரு காட்சியைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தச் சிலைக்கும் தலைநகருக்கும் இடையே 10 தனித்தனி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் ட்ரம்பும் எப்ஸ்டீனும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சிலைக்கும் சிலர் பாராட்டுகளும் சிலர் கேலியும் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4