“10,000 சிவில் இலக்குகள் தாக்கப்பட்டன” – ஐ.நாவில் ஈரான் தூதர் கடும் குற்றச்சாட்டு!

#America #UN #Israel #War #Iran #Iraq #L4 #IranVsIsrael
Lakhi
3 months ago
“10,000 சிவில் இலக்குகள் தாக்கப்பட்டன” – ஐ.நாவில் ஈரான் தூதர் கடும் குற்றச்சாட்டு!

அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை மௌனம் காப்பதாக, ஐக்கிய நாடுகளுக்கான ஈரானிய தூதர் அமீர்-சயீத் இரவானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேண வேண்டிய பொறுப்புள்ள பாதுகாப்பு சபை, இந்த விவகாரத்தில் "கண்மூடித் தனமாக" இருப்பது வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானில் இதுவரை சுமார் 10,000 சிவிலியன் இலக்குகள் தாக்கப்பட்டிருப்பதாகவும், இதில் ஏறத்தாழ 8,000 குடியிருப்புகள் அடங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தத் தாக்குதல்களில் இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஈரானுக்கு நேர்ந்தது, நாளை வேறு எந்தவொரு இறையாண்மை கொண்ட நாட்டிற்கும் நிகழலாம்" என்று எச்சரித்த அவர், இந்தப் போரை நிறுத்த சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.

சர்வதேச சட்டங்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் அமெரிக்க - இஸ்ரேலிய "ஆக்கிரமிப்பு" நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4