உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி உயர்வு!

#prices #world_news #Gold #ImportantNews #Market #silver #L4
Lakhi
3 hours ago
உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி உயர்வு!

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று கணிசமான உயர்வைச் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் உலகளாவிய சந்தை மாற்றங்கள் இதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

சர்வதேச சந்தையில் Spot Gold விலை 1.9% உயர்ந்து ஒரு அவுன்ஸ் 5,231.79 டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் U.S. gold futures 2.7% உயர்ந்து 5,242.10 டொலராக நிலைபெற்றுள்ளது. மேலும் வெள்ளியின் விலை 2.7% உயர்ந்து ஒரு அவுன்ஸ் 89.39 டொலராக வர்த்தகமாகின்றது.

அமெரிக்க டொலர் குறியீடு (Dollar Index) பலவீனமடைந்ததால், மற்ற நாட்டு நாணயங்களைப் பயன்படுத்தும் முதலீட்டாளர்களுக்குத் தங்கம் வாங்குவது மலிவானதாக மாறியுள்ளது. இது உலகளாவிய ரீதியில் தங்கத்திற்கான தேவையை அதிகரித்துள்ளது.

முன்னதாக மூன்று ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்ட மசகு எண்ணெய் விலை தற்போது சரிவை சந்தித்துள்ளது. இது பணவீக்கம் குறித்த கவலைகளை ஓரளவுக்குக் குறைத்தாலும், தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவையைத் தக்கவைத்துள்ளது.

அமெரிக்காவின் வரவிருக்கும் பணவீக்கத் தரவுகள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

தற்போதைய விலையேற்றத்தைத் தொடர்ந்து, தங்கம் 5,500 டொலரையும், வெள்ளி 100 டொலரையும் எட்டுமா என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது.எதிர்வரும் வாரங்களில் வெளிவரவுள்ள அமெரிக்க பணவீக்கத் தரவுகள் இந்த விலை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!