துபாயிலிருந்து திடீரென சென்னை வந்த நடிகர் அஜித்குமார்

#Actor #TamilCinema #Attack #Dubai #ajith #Middle East #L4
Prasu
3 months ago
துபாயிலிருந்து திடீரென சென்னை வந்த நடிகர் அஜித்குமார்

துபாயில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள நடிகர் அஜித் குமார் அங்கு சில மாதங்களாக தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் ராணுவ தளங்களை தகர்க்கும் வகையில் துபாயின் பல இடங்களில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இதற்கிடையே, துபாயிலுள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக இருக்கச் சொல்லியும் விரைவில் அவர்களை தாயகம் அழைத்து வரும் முயற்சிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகத் தெரிகிறது.

துபாயில் போர் பதற்றம் காரணமாக, அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் கவலையடைந்த நிலையில், அஜித்குமார் பாதுகாப்பான இடத்தில் நலமாக உள்ளதாக சமீபத்தில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று துபாயிலிருந்து சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அஜித்தை பார்த்த ரசிகர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4