ரியாத் மற்றும் துபாய்க்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!
மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, அதன் அடிப்படையில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலனிற்கு முன்னுரிமை அளித்து, ரியாத் மற்றும் துபாய்க்கான தமது அன்றாட வானூர்தி சேவைகளை மீள ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கள் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று இரவு ரியாத்திற்கும், நாளை முதல் துபாயிற்கும் வானூர்தி சேவைகள் இடம்பெறவுள்ளன.
UL265 கொழும்பு – ரியாத் 18:15 மணி
UL266 ரியாத் – கொழும்பு 22:35 மணி
UL231 கொழும்பு – துபாய் 12:40 மணி
UL232 துபாய் – கொழும்பு 17:00 மணி
இதேவேளை பயணிகள் மேலதிக விபரங்கள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 24 மணிநேர தொடர்பு மையத்தை 1979 எனும் இலக்கத்தினூடாகத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்