ஈரான் - இஸ்ரேல் போர்: மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் - மத்திய கிழக்கு நாடுகளில் உச்சக்கட்ட பதற்றம்!

#world_news #Attack #Israel #War #Iran #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #Middle East #L4
Abi
3 months ago
ஈரான் - இஸ்ரேல் போர்: மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் - மத்திய கிழக்கு நாடுகளில் உச்சக்கட்ட பதற்றம்!

ஈரான் தனது புதிய கட்ட ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் மீது ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள இஸ்ரேலிய இராணுவம், அவற்றை இடைமறித்து அழிப்பதற்கான வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் தற்போது செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு அவசர எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், பாதுகாப்பு கட்டமைப்புகள் இயங்கி வருகின்றன" எனத் தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், மக்களைப் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் அதிகரித்து வரும் இந்த நேரடி மோதல் நிலைமை பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4