அபுதாபி வானூர்தி நிலையத்தில் ஒருவர் பலி!- ஈராக்கில் மூவர் காயம்

#America #world_news #Iran #Iraq #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #IranVsIsrael
Lakhi
4 hours ago
அபுதாபி வானூர்தி நிலையத்தில் ஒருவர் பலி!- ஈராக்கில் மூவர் காயம்

அபுதாபியின் சையத் சர்வதேச வானூர்தி நிலையத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் ஆசிய நாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஏழுபேர் காயமடைந்துள்ளதாக அபுதாபி விமான நிலையங்கள் நிறுவனத்தை கோடிட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தநிலையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வமான செய்திகளை மட்டும் நம்புமாறும் வானூர்தி நிலைய நிர்வாகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, ஈராக் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பஸ்ரா (Basra) மாகாணத்தில், ஏவுகணைச் சிதறல்கள் வீழ்ந்ததில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக ஈராக்கின் கூட்டு நடவடிக்கைகளுக்கான கட்டளை மையம் அறிவித்துள்ளது.

இரண்டு ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்ட போது அல்லது வெடித்த போது ஏற்பட்ட சிதறல்கள் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வீழ்ந்ததனால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!