உலகின் உயரமான புர்ஜ் கலீபா கட்டிடம் அருகே டிரோன் தாக்குதல் நடத்திய ஈரான்

#America #Attack #Israel #Iran #Dubai #Building #Middle East #L4
Prasu
3 months ago
உலகின் உயரமான புர்ஜ் கலீபா கட்டிடம் அருகே டிரோன் தாக்குதல் நடத்திய ஈரான்

அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் முன்னெடுத்தது. இதில் போர் ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

தெற்கு ஈரானின் ஹர்மோஜ்கான் மாகாணத்தில் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் புர்ஜ் கலீபா கட்டிடம் அருகே ஈரானின் டிரோன்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

புர்ஜ் கலீபா கட்டிடம் அருகே நடத்தப்பட்ட தாக்குதல் ஈரானின் எதிர்தாக்குதல் இஸ்ரேலுக்கு அப்பால் விரிவடைந்து வருவதை காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரிகள் சேதத்தை மதிப்பிட்டு முக்கிய இடங்களைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் ஐக்கிய அமீரகத்தின் வான் பாதுகாப்பு, ஈரானின் பல ஏவுகணை அச்சுறுத்தல்களை தடுத்ததாக கூறப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4