போர் சூழலுக்கு மத்தியில் இஸ்ரேலிய மக்களுக்கு ராணுவம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

#America #Attack #Israel #Warning #Iran #L4
Prasu
3 months ago
போர் சூழலுக்கு மத்தியில் இஸ்ரேலிய மக்களுக்கு ராணுவம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து இன்று திடீர் தாக்குதல் நடத்தின. 

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரான், தொடர்ந்து பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீதும் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், ஈரான் ஏவிய ஏவுகணைகள் இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் விழுந்து வரும் நிலையில், அந்த இடங்களை புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க தடை விதித்து இஸ்ரேல் மக்களுக்கு அந்நாட்டின் ராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஏவுகணைகள் விழுந்த இடங்களின் துல்லியமான அமைவிடத்தை எதிரி நாடுகள் கண்டறிவதை தவிர்க்கவே இத்தகைய தணிக்கை நடவடிக்கைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4