ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் - இதுவரை 133 பேர் உயிரிழப்பு

#Afghanistan #Attack #Pakistan #Missile #L4
Prasu
3 months ago
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் - இதுவரை 133 பேர் உயிரிழப்பு

கடந்த பிப்ரவரி 6ம் திகதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் ஷியா மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குகளில் 31 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. 

அதனை தொடர்ந்து இந்த வார தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கியதில் 20 பயங்கரவாதிகளை கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. ஆனால் கொல்லப்பட்டவர்கள் மக்கள் என ஆப்கானிஸ்தான் கூறியது. 

இதற்கு பதிலடியாக நேற்று இரவு பாகிஸ்தான் எல்லைப் புறங்களில் உள்ள ராணுவ முகாம்கள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையான டுராண்ட் கோட்டில் நடந்த எதிர் தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. 

நான்கு மணி நேர நடவடிக்கையில் இரண்டு பாகிஸ்தான் இராணுவ தளங்களும் 19 இராணுவ சாவடிகளும் அழிக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே தாலிபான்களின் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் முக்கிய நகரமான காந்தஹார் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. 

இதில் 133 தலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாகவும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும், 27 தாலிபான் ராணுவ நிலைகள் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4