தாய்லாந்தில் 10 நாட்களில் 72 புலிகள் மரணம்
#Death
#Disease
#Thailand
#Zoo
#Tiger
#Virus
Prasu
2 months ago
தாய்லாந்தில் இனந்தெரியாத வைரஸ் தொற்று காரணமாக 72 புலிகள் உயிரிழந்துள்ளது.
தாய்லாந்தின் வடக்கு மாகாணமான சியாங் மாயில் உள்ள வனவிலங்கு பூங்காக்களில் பிப்ரவரி 8 முதல் 19 வரை இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன.
கால்நடை அதிகாரிகளின் முதற்கட்ட சோதனைகளில் பூனைகளிடம் இருந்து வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இறந்த புலிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் மற்றும் மைக்கோபிளாஸ்மா பாக்டீரியா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் தடுப்பூசிக்காக உயிர் பிழைத்த புலிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.
(வீடியோ இங்கே )