சிலியில் எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி விபத்து - நால்வர் மரணம்
#Death
#Accident
#fire
#Gas
#Chile
Prasu
3 hours ago
சிலி நாட்டு தலைநகர் சாண்டியாகோவில் ரென்கா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் திரவ எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
திடீரென்று ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விபத்தினால் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் அருகில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
(வீடியோ இங்கே )